புதன், 28 ஜூலை, 2010
நீ
என்னருகில்
இல்லை
என்பது
எவ்வளவு
உண்மையோ
அவ்வளவு
உண்மை
நீ
எனக்குள்
இருக்கிறாய்
என்பதும்
...!!!
சனி, 24 ஜூலை, 2010
ஒரு
குழந்தையைப் பார்க்க வைத்துக்கொண்டு
மிட்டாய் சாப்பிடுவதைப் போல் உள்ளது.
என்னைப் பார்க்க வைத்துக்கொண்டு
நீ அனைவருடனும் பேசுவது..
தூங்கி எழுந்து
காலையில் வாசலைப் பார்க்கையில்,
சத்தமில்லாமல் மழை பெய்ந்து முடித்திருக்கும்...
அதைப் போலவே
மிக அழகாக என்னுள் நீ நுழைந்தாய்.
காதலாக....
நீ படிக்கும்
கவிதையாக
வாழ முடியவில்லை..
So...
உன்னைப் பற்றி
கவிதை எழுதி
வாழ்கிறேன்.
உன்னிடம்
என்னால்
பேசவே முடியவில்லையடா..!
எப்படிப் பேசினாலும்
உன்
பேச்சால்
எனை மடக்கி விடுகிறாய்..!
என பொய்க் கோபம் காட்டும்
என் பொன் மணியே...
என்னதான்
நானுனை
பேச்சினில் மடக்கினாலும்...
எனை
உன் ஓரேயொரு
ஓற்றைப் பார்வை மடக்கி விடுகிறதே..!
அதற்கு முன்பு என் பேச்சொன்றும்
பிரமாதமில்லையடி..!
நேற்றைய பொழுது
என்னோடு
நீ
செய்த பயணம்...
என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்
இனிப்பையும் ஊட்டியது..!
நீ
என்னோடு
பேசிக் களித்த நிமிடங்களும்...
சீண்டி விளையாடிய தருணங்களும்...
செல்லமாய் அடித்த நிகழ்வுகளும்...
என்னோடு கைகோர்த்து
நடந்த நடையழகும்...
என்
கையில் கல்வெட்டாய்
உன் காதலை பதிவுசெய்த
எழுத்தழகும்...
எனை முழுவதுமாய்
ஆட் கொண்டு விட்டன..!
நீ
நடந்தால்...
உன்னுடனேயே நடக்கும்..!
நீ
சிரித்தால்...
உன்னுடனேயே சிரிக்கும்..!
நீ
அழுதால்...
உன்னுடனேயே அழும்..!
உன் நிழல்
போலத்தான்
அன்பே...
என்னுடைய காதலும்..!
மேகக் கூட்டம்
போன்றதுதான்
உறவும்… உடலும்..!
மின்னலைப்
போன்றதுதான்
அழகும்… இளமையும்..!
மழையைப்
போன்றதுதான்
மனசும்… மகிழ்ச்சியும்..!
ஆனால்
என்றும் அழியாத
கதிரவனைப் போன்றதுதான்…
என் கவியும்…
என் காதலும்..!
உன்
அழகிய
புன்னகை கூட
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
அப்படி
நான்
ஆயிரம் முறை
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!
ஞாயிறு, 18 ஜூலை, 2010
ஒவ்வொரு
முறையும்
உன் நினைவுகளை
தொடும்போது..,
வண்ணத்துபூச்சி
சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்!
யாருக்கும்
தெரியாமல்
நீ
பேச வரும் போதெல்லாம்...
வராமல் நிற்கின்றது
என் பேச்சு!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)