சனி, 1 அக்டோபர், 2011
பொறுக்கவே
முடியவில்லை
என் மறதிகளை
நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்
அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்.
அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்
எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு!.
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல,
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!
பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!
திங்கள், 21 பிப்ரவரி, 2011
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் .,
இறந்தாலும்...
நினைத்த கணத்தில்
கலங்க வைக்கும் ...
அவளின் ..பிரிவு!.
உலக வரைபடத்தில்
கடல் நீரால்
காணமல் போன
என் தேசம் நீ....?
உன்னால்
கைவிடப்பட்ட
தீவாய் நான்......!!!
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
இன்று
இன்று
எல்லா உறவுகளும்,
என்னோடிருக்கிறது
ஆனாலும்
தனிமையில் தவிக்கிறேன்
நீ
இல்லாததால்!
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)