ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் .,
இறந்தாலும்...
நினைத்த கணத்தில்
கலங்க வைக்கும் ...
அவளின் ..பிரிவு!.
உலக வரைபடத்தில்
கடல் நீரால்
காணமல் போன
என் தேசம் நீ....?
உன்னால்
கைவிடப்பட்ட
தீவாய் நான்......!!!
இன்று
எல்லா உறவுகளும்,
என்னோடிருக்கிறது
ஆனாலும்
தனிமையில் தவிக்கிறேன்
நீ
இல்லாததால்!
கடைசி வரை இருப்பாயா என்றாய்
இதோ நான் மட்டுமே இருக்கிறேன்
உன்னை தேடிக்கொண்டு..
உன் மொழிகளில் எதை மறக்க
என எனக்கு தெரியவில்லை.
நீ பேசிய வார்த்தைகளெல்லாம்
வேதவாக்காய் தேவனின் மொழியாய்
என் இதயத்தில் வைத்து இன்னும் பூஜிக்க
உனக்கு மட்டும் என்னிடம் எப்படி சலிப்பு வந்தது.
எந்த உறவும் உன்னை கடந்து
என் நினைவை தொட அனுமதிக்காமல் நான்.
அதிகபட்ச எதிர்ப்பார்பு
உன் அன்பான வார்த்தைகள் மட்டுமே
என்னை அழவைக்காதது நீ மட்டுமே
என பெருமிதமாய் கழிந்த நாட்கள் போய்
அழதா நாட்கள் இல்லை என்ற நிலை
இன்று..,
உன் பார்வைகளை பெற்று
என் இதயத்தின் கருவறையில்
காதல் வளர்த்து வந்தேன்..
ஒரு தாய் தன் கருவை
ஆனா?பெண்ணா?என்று
தெரியாமல் சுமப்பது போல...,
நானும் என் காதல் வெற்றியா?
தோல்வியா?
என தெரியாமல் சுமக்கிறேன்....
ஆனால், என் காதல்
தோல்வி அடைந்ததால்
எந்த கள்ளிப்பால்
கொடுத்து என் காதலை
கொல்வேன்....