கடைசி வரை இருப்பாயா என்றாய்
இதோ நான் மட்டுமே இருக்கிறேன்
உன்னை தேடிக்கொண்டு..
உன் மொழிகளில் எதை மறக்க
என எனக்கு தெரியவில்லை.
நீ பேசிய வார்த்தைகளெல்லாம்
வேதவாக்காய் தேவனின் மொழியாய்
என் இதயத்தில் வைத்து இன்னும் பூஜிக்க
உனக்கு மட்டும் என்னிடம் எப்படி சலிப்பு வந்தது.
எந்த உறவும் உன்னை கடந்து
என் நினைவை தொட அனுமதிக்காமல் நான்.
அதிகபட்ச எதிர்ப்பார்பு
உன் அன்பான வார்த்தைகள் மட்டுமே
என்னை அழவைக்காதது நீ மட்டுமே
என பெருமிதமாய் கழிந்த நாட்கள் போய்
அழதா நாட்கள் இல்லை என்ற நிலை
இன்று..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக