செவ்வாய், 30 மார்ச், 2010

வாழ்கை தரும் 
துன்பங்கள் வலிமையானது 


அதனினும் 
வலிமையானது 


மனிதனின் நம்பிக்கை!
புன்னகை இல்லாத 
முகம் இருக்ககூடும்,


முகமே இல்லாத
புன்னகை நீ தான்!
ஒவ்வொரு
ஆணின் வெற்றிக்குபின்னும் 
ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் 


அது 


எல்லோருக்கும் 
வாய்ப்பதில்லை
எனக்கு வாய்த்திருக்கிறது
நீயாய்!

திங்கள், 22 மார்ச், 2010

ஒரு உயிரை

நீ நேசிப்பது உண்மையென்றால்

அதை


ஒரு பறவை போல
பறக்கவிடு,


அது உன்னை நேசிப்பது
உண்மையென்றால் மீண்டும் உன்னிடமே வந்துசேரும்.
ஒரே

ஒரு எழுத்தில்
கவிதை, ஓவியம், சிற்பம் பற்றி
கவிதை எழுத சொன்னாய்


நீ முடிக்கும்
முன்னே நான் எழுதினேன்


நீ!
நீ

இருக்கும் போது
உன் பேச்சும்,


இல்லாதபோது
உன் மௌனமும்

என்னை எப்போதும் வதைத்துக்கொண்டுதானிருக்கிறது.
மலர்

மௌனமானது
அதனால் அது மலரானது..,


நீ
மட்டும் எப்படி பெண்ணனாய்?

வெள்ளி, 19 மார்ச், 2010

இவை


இப்படித்தான் என்று
நான் நினைத்துக்கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு
சுலபமாய்
நீ பொய்யாக்கிவிடுகிறாய்..,


உதிர்வதென்பது
எப்போதும் சோகம் தான் என்கிற
என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்னப்புன்னகை பொய்யாக்கி விடுகிறதே!
உன்னை மறக்க நினைக்கிறேன்,
நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை

மறக்க நினைக்கிறேன்,
உன் முகம் என் கண்முன்னே வருகிறது
இரண்டையும் மறக்க
நினைக்கிறேன்...

மரணம் கண்முன்னே வருகிறது.
நான் உன்னை காதலிக்கிறேன்



நீ என்னை காதலிக்கிறாயா?
என்பது
கேட்டு வாங்கும் காதல்!


நான் உன்னை விரும்புகிறேன்
விரும்பிகிட்டே இருப்பேன்
நீ
என்னை விரும்பாவிட்டால் கூட


இது தான் என்னுடைய காதல்
எதையும் எதிர்பாராத காதல்!
கனவிலோடும் கடவுளை

கண்டிட வேண்டும்- நாம்
பிரியாவரமொன்றை
வாங்கிட வேண்டும்!


விழியோரம் வழிகின்ற
நீராக வேண்டும் - உன்
மடி மீது தானே- என்
மரணம் வேண்டும்!


யாரோடு வாழ்ந்தாலும் - நீ
நலம் வாழ வேண்டும்
என் நினைவாக ஜென்மங்கள்
எல்லாம் நீயே வேண்டும்!


இவ் ஜென்மம் நம் உறவு
பிரிந்திட நேர்ந்தாலும் - மறு
ஜென்மம் உன் மகனாய்
பிறந்திட வேண்டும்!


தாயாய் நீ என்னை
தாலாட்ட வேண்டும்
சேயாய் உன்மடியில் - நான்
தூங்கிட வேண்டும்!


செல்ல குறும்புகள் -நான்
செய்ய வேண்டும்
சிரித்தபடி நீ என்னை
அணைத்திட வேண்டும்!


தவறுகள் நான் செய்தால்
நீ தண்டிக்க வேண்டும்- நீ
தண்டித்து நான் அழுதால்
அன்பாய் தலை கோத வேண்டும்!


தாய் உறவாக ஜென்மங்கள் - நீ
வாழ வேண்டும் - சேய்
உறவாக உன் மடியில்
உயிர் போக வேண்டும்!


வயதாகி விட்டால் இரு கை சுமந்து
குளிப்பாட்ட வேண்டும் - உனை
துவட்டி கூறை கட்டி
அழகு பார்க்க வேண்டும்!


கவிஞர்கள் நம் அன்பை
கவிபாட வேண்டும்
காலங்கள் நம் உறவை
கதையாக்க வேண்டும்!


இது என்ன உறவென்று
நான் கேட்க வேண்டும் - போன
ஜென்மத்து உறவென்று

நீ சொல்ல வேண்டும்!
என்
நினைவாய் 
ஒன்றும்  உன்னிடம் இல்லை 


ஆனால்


உன் 
நினைவாய்
என்னிடம் 
உன் நினைவு மட்டுமே உள்ளது!

சனி, 13 மார்ச், 2010

உனக்கு
பிடிக்காதவை என
நான் இழந்தவைகளும், 


எனக்கு
பிடிக்கும் என
நீ கற்றுகொண்டவைகள் மட்டும்
நம் காதலை வலுபடுத்தவில்லை!

வெள்ளி, 12 மார்ச், 2010

எனக்காக
நீ
கடவுளிடம் 
வேண்டியதெல்லாம்
எனக்கே கொடுத்துவிட்டார்


இன்னும்
ஒன்று மட்டும்
எனக்காக வேண்டிகொள்ளேன்
நீயும்
எனக்கே கிடைக்கவேண்டுமென!