செவ்வாய், 11 ஜனவரி, 2011


நீ 
என்பது 
பெரியவொரு மழைத்துளி.

மழை 
என்பது 
சின்ன சின்ன நீ!.

*

இரண்டு 
இமைகளையும் குடையாய் விரிக்கிறாய்.
பெய்யத் துவங்குகிறது 
காதல் மழை!.

*

ஜன்னல் 
கம்பிகளில் துளிர்த்த நீர்த்துளிகளை
சுண்டுவிரலால் நீ சுண்டி விடும்போது,
கம்பிகள் எல்லாம் வீணை தந்திகள் ஆகிவிட்டன!.

*

கிளிப் பேச்சு தெரியும் -
ஜன்னலோர மழையோடு பேசுகிறாயே..
இதென்ன துளிப் பேச்சா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக