திங்கள், 30 ஆகஸ்ட், 2010

விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு 
கண்ணீராய் உன் நினைவுகள்..
 
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு 
சொந்தங்களை விட்டு விட்டு...
 
மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..
 
வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும் 
நொந்துப் போகும் மனது..
 
எந்திரமான வாழ்க்கைக்கு 
தந்திரமாய் நீ தரும் 
அழுகையோடு சேர்ந்த முத்தம்..
 
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம் 
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;



 

சனி, 28 ஆகஸ்ட், 2010

என்  
இதயத்திலிருந்து
வெளியேறியபோது

நீ
அணைத்துவிட்டு  வந்த
விளக்குடைய  கரிப்புகையின்
அசைவுகள்தான்

இந்தக்  கவிதைகள்!

சனி, 21 ஆகஸ்ட், 2010

விடை தெரியாத 
பல வினாக்கள் உண்டு…… 

முற்று பெறாத 
சில வரிகளும் உண்டு ……… 

அப்படியே 
இருந்து விட்டு போகிறேன் 
நானும், 
நீ இல்லாமல்…………!

வலிகளை 
சுமக்கும் 
இதயத்திற்கு.... 
கண்ணீர் சிந்த 
தெரியாது ! 


கண்ணீர் சிந்தும் 
கண்களுக்கோ வலிகள் 
தாங்க முடியாது ! 


அன்பு அப்படி தான்.

அவளிடம்

பேச 


ஒரு 

நிமிடம் கிடைத்தால் போதும்,


கண்ணோடு இருக்கும் 

கண்ணீர் மட்டுமல்ல,


என்னோடு இருக்கும் 

கவலைகளும் மறைந்து விடும்.... 

உனக்காகத் தவமிருந்தேன் 
ஒரு
முறையாவது,
என் 
பெயர் சொல்லி அழைப்பாய்-


நீ 
என்று!

காகிதமின்றி

ஒரு 

கவிதை
எழுதுகோல் இன்றி எழுதபடுகிறது 


உதடுகள் திறவாமல் 

ஓர் கவியரங்கம்
ஒவ்வொரு நாளும்
அவள் விழி அசைவினில்..... 

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

எதை எதையோ கிறுக்கி, 
உன் பெயருக்கு
காதல் கவிதை அனுப்புகிறேன் 
அழகாய் இருக்கிறது

எதையும் கிறுக்காமல் 
உன் பெயரை
மட்டும் எழுதுகிறேன் 
அதை விட 
அழகாய் இருக்கிறது!

புதன், 4 ஆகஸ்ட், 2010

தொலைவில்  சிலவும்
அருகில்  சிலவும்
தீபங்கள்  ஊர்வலம்  சென்றன
இடையாடும்  பெண்ணின்  அழகு  போல

மனதில்  என்னவோ
ஒரு  நினைவு
தோன்றி  மறைந்தது.

மிதந்து  செல்லும்
தீப  ஊர்வலத்தை
மீண்டும்  ஒருமுறை  பார்த்தேன்
மகிழ்ச்சிக்கிடையில்
அழுகை  வந்தது
ஏனோ  எனக்கே  புரியவில்லை!