வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

இன்னொரு நாள்,
இன்னொரு தருணம்,
இன்னொரு வாழ்கை,
இன்னொரு நண்பன்,

இப்படி நான் தவறவிட்ட
எல்லாவற்றிற்கும்
இணையாய் இன்னொன்று கிடைக்கும்
ஆனால்
இன்னொன்று
நீ
கிடைப்பாயா?.
காதல்
சுகமான சுகம்தான்,


காதலி தான்
சுகமான சுமை என்றேன்
உன்னை பார்த்துவிட்டு


நீயோ
கோபித்து கொண்டாய்!


ஆமாம்


பெண்ணே!
நீ என்றுமே
என் காதலியல்ல,


என் காதல் என்றேன்
நீயோ வெட்கத்தில் முறைத்தாய்!

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

உன்னை அதிகமாகவே நேசித்துவிட்டேன்
அதனால்தான்!

உன் நினைவுகளை  
மட்டுமல்ல!

உனக்காக
சேர்த்துவைத்த எதையுமே
வேண்டாமென்று

ஒரேநாளில்
தூக்கி எறியமுடியவில்லை
வலிக்கிறது!.
மண்ணைத்தோண்டி
தண்ணீர் தேடி
காயம்பட்டு கசிந்த கைகள்!

மனதை தோண்டி
அன்பை தேடி
வாய்விட்டு அழுது சிவந்தகண்கள்!

காதலிக்கும் போது
கவிதை எழுதசொன்ன காதலே
இன்று
நீயே கவிதை ஆனாய்!
நீ
பிறந்தபோதுதான்
பிறந்தது எனக்கான வாழ்வும்!


நீ
ஆழ்கடல் போல்
இருந்துகொண்டு ஓராகடல் போல்
ஓலமிட செய்கிறாய்!


நீ
எங்கிருக்கிறாய் என்பது
எனக்கு  தெரியாது-ஆனால்
என் காதலுக்கு தெரியும்


நீ
அருகிலிருந்தபோது உணராத காதலை
ஒரு நாள் பிரிந்திருந்தபோது உணர்தேன்!


நான் கஜினி முகம்மது
பதினேழு முறையல்ல
பதினேழாயரம் முறை கூட
படையேடுப்பேன்
எனக்கு வேண்டியது
எனக்கான உன் காதல்!

சனி, 20 பிப்ரவரி, 2010

நான்
கல்லூரியில் கூட
யாரையும்பார்த்து தேர்வெழுதியதில்லை

-ஆனால்

இப்போது
உன்னை பார்த்துபார்த்து கவிதை எழுதுகிறேன்!
ஒவ்வொரு
கவிதை முடிவிலும்
உன்னை இன்னும் அதிகமாய் நேசிக்கிறேன்

அதனால்தான்!
மீண்டும் மீண்டும் கவிதை எழுதிகொண்டிருகிறேன்.

சில நேரம் நீயும்,
சில நேரம் நீயுமாய்!
ஏன் அழகாய், அவசியமாய்,
என்னை  சித்திரைவதை செய்கிறாய்!
உன்னிடம் இருக்கும்
எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும்
நினைவுகொள்!

எதிர்காலம் 
என்ற ஒன்று எப்போதுமிருக்கிறது 
அதில் 
எந்த அற்புதங்கள்  வேண்டுமானாலும் நிகழலாம்!
காலம் உருவாக்கும் மனிதர்களும் உண்டு,
காலத்தை உருவாக்கும் மனிதர்களும் உண்டு,




இதில்
நீ காலத்தை உருவாக்கும் மனிதனாய் இரு!