செவ்வாய், 25 மே, 2010


நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...


முற்றத்தில் 
நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் 
பொழுதெல்லாம்
மனதில் 
நீயே நீர் தெளிக்கிறாய்!
*
நீயள்ளி 
முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன்
 கால் நனைத்து கொஞ்சுகிறது.
தோளில் நீ சாய்கையில்
சில்லென்று 

ஒரு தென்றலும்
என்னை 

சுற்றி சுழன்றது,

என் 
கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும் 

எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,

ஒவ்வொரு 
புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,

ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா 

நீ?

புதன், 12 மே, 2010

உன்னை
எந்த அளவுக்கு பிடிக்குமென தெரியாது,


ஆனால் 


உன்னை
பிடித்த அளவுக்கு
இந்த உலகத்தில்
வேறு எதுவும் பிடிக்கவில்லை!

சனி, 8 மே, 2010

உன்னை வரையும் பாக்கியம்
என்விரல்களில் காத்திருக்கின்றன.

என் உடலெங்கும்
நீயான ஓவியம்
ஓட்டப்பட்டள்ளது!

மௌனம்
உன் மொழியான போதும்
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.

எனதான சொற்களை
உன்னில் நிரப்புகிறேன்.

நீ வெளிப்படுத்தாத புன்னகை – சில
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.

நீ வினோதங்கள் ஆகிறாய்,
நான் புன்னகையாகிறேன்

கண்முன் - ஒரு
பயணத்தை ஒப்படைக்கிறாய்.
அதைமேற்கொள்ள
பூக்களையும் பரிசளிக்கிறாய்

உன்னை தாங்கிக்கொள்ள
கரம் ஏந்துகிறேன்
நீ நழுவி
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்
யாரும் அறியாத ரகசியமாய்! 
ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகளை எல்லாம்
உன்னிடம் சொல்லிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!

விடியல் தலை காட்டும் வரை
மடியில் தலை சாய்த்துக்கொண்டு;
நொடியும் இடைவெளியின்றி,
பேசிக்கொண்டிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

மங்கிய நிலவொளியில்
பொங்கிய சாதத்தை
இங்கிதம் பார்க்காமல்ஊட்டிவிட;
ஆசையாகத்தானிருக்கிறது!

கண்ணிறம் கருப்பல்லவா!
செந்நிறம் உதடல்லவா!!
பொன்னிறம் மேனியல்லவா!!!
உன்னைப் பாடிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!

சோர்வோடு நீ இருக்கும்போது
மார்போடு அனைத்துக்கொண்டு;
உயிரோடு கலந்த உன்னைப்
பரிவொடு விசாரிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

பின்னால் உன்னை அமரவைத்து
முன்னால் போகும் வாகனங்களை
என்னால் முடிந்த மட்டும்
விரட்டிப் பிடிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

குளித்து விட்டு நீ தலை துவட்ட
தௌ¤த்து விழும் அந்த துளியில்
சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,
அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள
ஆசையாகத்தானிருக்கிறது!

காதருகில் வைத்த அலாரம்
12 மணி இரவில் கதற
அலற லோடு நீ எழும்
அந்த தருணத்தில்
பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,
முத்தமிட
ஆசையாகத்தானிருக்கிறது!

நகத்தை நீ கடிக்கும்போது
நானும் அப்படியே செய்து
முகத்தை நீ திருப்பும்போது
நானும் அப்படியே செய்து
கோபத்தில் இருக்கும்
உன்னை மேலும் கோபமூட்ட
ஆசையாகத்தானிருக்கிறது!

நீ சிரிக்கின்றபோது
உனக்கு பின்பாகவும்;
நீ அழுகின்றபோது
உனக்கு முன்பாகவும்;
நீ நடக்கின்றபோது
உனக்கு பக்கமாகவும்
என்றுமே காவலனாயிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது! 
அதிசயமான நதி நீ;

கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!

*

ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!

*

எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!

*

உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!

*

உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!

*

ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்! 
நீ போனாலும்.......
கடற்கரையெங்கும்
பரந்து கிடக்கும் 

உன்
சிரிப்பென்னும்
கிளிஞ்சல்களை
கைநிறைய அள்ளுகிறேன்!

காதல்எனும்
மணல் வீட்டை
திரும்ப திரும்ப கட்டுகிறேன்
"இல்லை"எனும் அலைகள்
இனிவராது இருக்கலாம்!

பார்வையெனும்
சிறு குழிகள்
கரையோரம்
தோண்டுகிறேன்
கிடைப்பதென்னவோ
கண்ணீர்எனும்
அதே உப்புநீர்தான்!

மணல்வெளியெங்கும்
உன் பாதத்தின்
சுவடுகளையாவது
விட்டுசெல்
முன்னறிவிப்பின்றி
உன்போல்
போகமுடியாதென்னால் ! 
மறப்பது...
நினைப்பது...
மறக்க நினைப்பது...
நினைக்க மறப்பது..

ஒரு
குழப்பமான
கவிதை தான்
காதல்.
உனக்கென்ன
பிடிக்குமென
அடிக்கடி கேட்கிறாய்!


நீ
என்பதைத் தவிர
வேறு என்னவாய்
இருந்துவிடப்போகிறது

என் பதில்!
என் வீட்டில் 
ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!

நீயே வந்து
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!

நான் பறித்துத்
தரும்வரை காத்திருந்தால்
நீ காதலி! 

நீ

வர நேரமாகும்
நாட்களில்..,

என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்,

என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று!
தேடிவிட்டேன்
ஆழம் தோண்டி
பார்த்துவிட்டேன்

உதிரம் கலந்த காற்றாய்
உணர்வுகள் கலந்த உடலாய்
எங்கு ஊற்றெடுக்கிறாய் ?

இதயத்தின் எந்த மூலையில்
துடித்துக் கொண்டிருக்கிறாய் ?

என் தேசத்தின் எந்த மூலையில்
படையெடுத்தாய் ?

என்றாவது கண்டுப்பிடிப்பேன்
காதலுக்குள் உன்னை !