சனி, 30 அக்டோபர், 2010

பிரிவும் ஒரு காதல்தான்!


உனக்காக 
என் ஆசைகளை
பிரிந்தபோது..,


பிரிவும் ஒரு காதல்தான்!


உனக்காக
என் கண்கள் 
தூக்கத்தை பிரிந்தபோது..,


பிரிவும் ஒரு காதல்தான்!


உனக்காக 
என் உறவுகளை
நான் பிரிந்தபோது..,


பிரிவும் ஒரு காதல்தான்!


எனக்கான
என் வாழ்வை 
நான் மறந்தபோது..,


பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிதவளே!


காதலிக்கதொடங்கிவிட்டேன்
காதலாக உன் பிரிவை கூட..,









சனி, 16 அக்டோபர், 2010

பள்ளிச்சிறுவன் 
புத்தகத்தில் மயிலிறகு ஒளித்துவைத்திருப்பதை போல,


உன்னை
என் மனதிற்குள் ஒளித்துவைத்திருக்கிறேன்


ஒளித்துவைத்திருப்பவரின்
விருப்பங்களை ஒருபோதும் 
புரிந்து கொண்டதே இல்லை 


மயிலிறகும்,
நீயும்!

வியாழன், 14 அக்டோபர், 2010

பள்ளி இறுதி நாளில் 
உன்னை 
நான் கேட்டேன் விடையென்று 
நீ உதிர்த்துச் சென்ற 
உன் உதட்டுப் புன்னகை 


இன்னும்


விடை தெரியாமல் 
என்னுள் புதைந்து கிடக்கிறது.



சனி, 9 அக்டோபர், 2010


உணராத 

உன்னைவிட
உணர்வுகளை சுமக்கின்ற - இந்த
காகிதங்கள் அழகானது....




நீ
வரைந்த
கோலம்
அழகு என்றனர்
ஆனால்
நீ
கோலம் வரைவதே
அழகு
என்றேன் 



என்னை
எப்போதுமே தனிமைபடுத்துகிறாய்


காதலிக்கும் போது 
மற்றவரிடமிருந்து..,


பிரியும் போது
என்னிடமிருந்து..,




முன்பு மலராக விரிந்த 
உன்மனம்- இன்று
மொட்டாக மூடிக் கொண்டது.

முன்பு அன்பாக பேசிய 
உன் இதழ்கள்- இன்று
பேச மறுக்கிறது.

முன்பு பாசமாக பார்த்த 
உன்பார்வை- இன்று
பார்வையை வெறுக்கிறது.

முன்பு உறங்கும் போது கனவில் வந்த 
என் தேவதை- இன்று
உறங்க விடாமல் கொல்லுகிறாள்.

ஏன்
என்று என் காதலை கேட்கிறேன்
விடை சொல்லுமா?




நீ 
வரும் வழியில் காத்திருந்த 
என் கால்கள்
நீ கடந்து சென்றதை காண வில்லை...

உனைக் காண துடித்துக் கொண்டிருந்த 
என் கண்கள்
நீ பார்த்து சென்றதை பார்க்க வில்லை....

உன் குரலை கேட்க விரும்பிய 
என் செவிகள்
நீ காணம் பாடியும் கேட்க வில்லை....




ஞாயிறு, 3 அக்டோபர், 2010

என்

வீட்டு முற்றத்தை
அலங்கரிக்கும்
வெள்ளை ரோஜாக்களை கூட
பிடிக்கவில்லையடி

ஏனெனில்


அன்றுநீ கொடுத்த அந்த ஓரேயொரு

ரோஜாவால்!


உன்னை

காதலிக்கவில்லை -என்று
பலமுறை
சொல்லிஇருந்தேன்

ஆனால்
நான் பொய் சொல்ல
நினைக்கும்போதே

நீ சிரித்தாய்

என்
இதயத்துக்குள் இருந்து!.






காதல்..
கைசேர்ந்தவனுக்கு
வரப்பிரசாதம்.

தோற்றுப்போனவனுக்கு
சாபம்.

நானும் உணர்கிறேன்
நீயே சொல்
என் வாழ்கையை
மீட்டுக்கொடுத்த
நீயே
சாபத்தையும்
கொடுத்து விடுவாயா ?



சனி, 2 அக்டோபர், 2010

உன்னை  நினைத்து 
நான் கவிதை எழுதுனேன்!

ஆனால் 


என் கவிதை கூட 
என்னை நேசிக்காமல்,
உன்னை மட்டுமே நேசிக்கிறது!