சனி, 17 ஏப்ரல், 2010

மழை பெய்த 
ஒரு மாலை பொழுதில் நாம் 
நனைந்துகொண்டே கை கோர்த்து நடக்கிறோம்,


நீ
கேட்கிறாய்
இந்த மாலை பொழுது அழகா?-இல்லை
மாலையோடு 
வந்த மழைத்துளி அழகா? என்று


நான்
சொன்னேன்
உன்னோடு வியாப்பிதிருக்கிற 
வெயில் கூட 
அழகுதான்!. 

உண்மையான
அன்புக்கு மட்டுமே 
உன் கண்ணீர் துளிகள் 
தெரியும்,


நீ
மழையில் 
நணைந்துகொண்டே 
அழுதாலும்!

எப்படி மறக்கமுடியும் உன்னை?
நீ 

நினைவில் வந்து
நிற்கும் போதெல்லாம்

கண்ணீர் வழிந்து உப்புக்கரிக்கும்
ஒவ்வொரு
நாளும் உணர்கிறேன்

தூக்கு கயிறு முன் நிற்கும்
கைதியின் கடைசி 

நிமிடமாய்!

புதன், 7 ஏப்ரல், 2010

தன்
பெயரை தவறாக 
எழுதிகொண்டிருந்த குழந்தையின்


கை 
பிடித்து 
சரியாக எழுத 
கற்றுகொடுத்தேன் 


என் காதலின் பெயர் என்பதால்!

வியாழன், 1 ஏப்ரல், 2010

கோடி
வண்ணத்து புச்சிகளுக்ககான
பூக்கள் உன்னிடமிருக்கலாம்

ஆனால்

நான்
சுற்றித்திரிய மட்டுமே
ஒரு பூந்தோட்டம்
தந்தவள் நீ!
ஆழமாகவே
உன்னை
விரும்பிருக்கிறேன்,

அதிகமாகவே
உன்னோடு
சண்டை இட்டிருக்கிறேன்,

ஒவ்வொரு
புன்னகையையும் 
துளிவிடாமல் பதிவு செய்திருக்கிறேன்,

நான்
எப்போதும் உன்னோடு இல்லாவிட்டாலும்  

என்
ஞாபகங்களை
உன்னைச்சுற்றியே திரியவிட்டிருக்கிறேன்

அனைத்து வகையிலும்
உன்னை
என்னோடு சேர்த்தே மதிப்பிட்டிருகிறேன்.

அதனால்தான்
உன் பிரிவு
என்னை வாய்விட்டு அழவைக்கிறது!
நீ
என்னை தேடும்
பட்டாம்பூச்சி!

என்னை கண்டுபிடிப்பது
என்பது
நான்
உனக்கு விட்டிருக்கும் வேலை!

தேடிக்கொண்டே இரு!
இன்றுமுதல்
உன்
பள்ளிக்கு மட்டும்
விடுமுறையல்ல!

உன்
இதழோர புன்னகைக்காக காத்திருந்த
எனக்கு விடுமுறை.

உன்
பார்வையின் தேடலில்
எனக்கிருந்த
சந்தோழங்களுக்கு விடுமுறை.

உன்
செய்கைகளுக்காக
நான் எழுதிய நாட்குறிப்புகளுக்கு விடுமுறை.

உன்னை
செதுக்க
நான் தீட்டிய கவிதைகளுக்கு விடுமுறை.

மொத்தத்தில்
நாம் நம்
உயிரையும்,
உணர்வையும் பரிமாறிய 
காதலுக்கும் விடுமுறை. 
இறப்பதெனில்
இறந்துவிடுவேன் இமைபொழுதில்.

அணு
அளவுகூட
உயிர்பயமில்லை எனக்கு!

இருந்தபோதும்..,

இருக்கிறேன்
சுயநினைவற்று
சுவாசிக்கும் பிணமாய்..,

என்றாவது
ஒருநாள்
மனம்மாறி
நீ வரநேர்ந்தால்..,

ஏமாந்து விடக்கூடாதே
என்பதற்காக! 
என்
இனியவளே!

உனக்கு
என் நன்றி!

உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமிலிருந்திருந்தால்
இந்த இலை
ஒளிச்சேர்க்கை செய்யாமலேயே
உதிர்ந்துபோயிருக்கும்!
ஒவ்வாமை
மனசுக்கும்,
உடலுக்கும்,


எதையும் 
ஏற்க மறுக்கிறது


விரட்டிப்பார்க்கிறேன்
நாய்க்குட்டியாய்
சுருட்டி,சுருண்டு
படுத்துகொள்கிறது
உன் ஞாபகம் 


இத்தனை காலமாய்
செல்லமாய் எனக்கிருந்தது 


இன்றும்,
இனிமேலும் வேண்டாத பொருளாகிப்போனது


மனசுக்கு
மருதாணி இட்ட விரல்கள்
ஊசி நூல்கொண்டு தைக்கிறது


வாய்விட்டு
அழமுடியவில்லை


தேவையென
செர்த்துவைத்ததெல்லாம்
வேண்டாமென்று
ஒரே நாளில்
வீசிவிடமுடியவில்லை வலிக்கிறது!
உனக்காக
நான் காத்திருப்பேன்!

எனக்காக
நீ காத்திருப்பாயா?

இயற்கையாய்
காதல்-அதில்
பூக்களாய் நாம்!
உன்
விருப்பம் எதுவென
எனக்கு தெரியாது

அழகான
அத்தனை பூக்களையும் தவிர்த்து
ஒரு பூவை
பறிக்கமுயன்ற விரல்கள்,

எப்போதுமே
உன்
எண்ணங்களில் தட்டுபடாத
உருவமாய் இருக்கிறேனா?

மனசுக்குள்
உட்கார்ந்து வாரி இறைக்கிறாய்
அத்தனை 
புழுதிகளையும் சுமந்திருக்கிறது 
சுமைதாங்கியாய் மாறிப்போன
இதயம்!

நீ
மலரும்போது 
உன்னையறியாமல் என்னில் 
கலந்துவிடுவாய் என்று 
எந்த பொழுதிற்காக காத்திருப்பது?