ஒவ்வாமை
மனசுக்கும்,
உடலுக்கும்,
எதையும்
ஏற்க மறுக்கிறது
விரட்டிப்பார்க்கிறேன்
நாய்க்குட்டியாய்
சுருட்டி,சுருண்டு
படுத்துகொள்கிறது
உன் ஞாபகம்
இத்தனை காலமாய்
செல்லமாய் எனக்கிருந்தது
இன்றும்,
இனிமேலும் வேண்டாத பொருளாகிப்போனது
மனசுக்கு
மருதாணி இட்ட விரல்கள்
ஊசி நூல்கொண்டு தைக்கிறது
வாய்விட்டு
அழமுடியவில்லை
தேவையென
செர்த்துவைத்ததெல்லாம்
வேண்டாமென்று
ஒரே நாளில்
வீசிவிடமுடியவில்லை வலிக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக