ஞாயிறு, 27 ஜூன், 2010

உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது

அம்மாவுக்கு

வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ.
எப்பொழுதாவது
ஒரு கடிதம்...
என்றாவது ஒரு
தொலைபேசி அழைப்பு...
ஆயுள் முடிவதற்குள்
ஒரு சந்திப்பு...
இவைகளில்
ஒன்றுக்காவது வாய்ப்பு கொடு
என் முதல் காதலியே!

•ஆறடிக் கூந்தலில்
ஆறு முழம் பூ
அழகாய்தான் இருக்கிறது
ஆனால்
அதன் சுமை தாங்காமல்
என் இதயம்

•இன்று
உன்னை நினைத்தாலும்
தலையறுத்தச் சேவலாய்
துடிக்கிறது
என் நெஞ்சு

•உன்னிடம்
கற்றுக் கொண்ட
காதலுக்காக
என் இதயத்தை
குருதட்சனையாக
ஏற்றுக்கொள்

•என் நினைவுகள்
உன் மடிமேல்
நீ
தலைகோத
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது

•நீ அகப்படாததால்
என்
இதயம்
தூண்டில் புழுவாய்த்
தவிக்கிறது 

திங்கள், 21 ஜூன், 2010

ஒரு 
குளிர்கால மாலை 
இருளும் வேளையில் 
சில நீர்த்துளிகள் 
புவியை நோக்கிச் சிதறின

வெளிச்சப் பறவைகள் 
தங்கள் சிறகுகளை 
முடக்கி ஓயும் வேளையில்

நிலவு 
தன் 
முகம் காட்டி நகைத்தது
 
பறவைகள் 
சில விரைவாய் 
தங்கள் கூடுகள் தேடின

மரங்கள் 
மகிழ்ச்சியாய் தங்கள் கிளைகள் விரித்தன
 
மாலை 
மங்கும் வேளையில் 
முகம் எங்கும் துளிகளாய் 
இரு மான்விழிகள் 
குறும்பாய் விழித்தன என்னை

அழகின் சாயல்கள் 
சிறிதும் குறையாமல் 
அதரங்கள் 
இரண்டு விரிந்து இசையை தெளித்தன

தோகைகளே இல்லாமல் 
இரு கால்கள் அழகாய் 
இங்கே நடை பயின்றன. 

உன்னை 
பார்த்தபோது நொடிகள் 
ஏனோ நின்று போயின...... 

சிறகுகள் சில முளைத்தன...... 
உலகம் ஏனோ சுழன்றது கீழே........ 
பொழிந்தும் பொழியாமலும்
 மழைச்சாரல்கள் வெளியே மட்டும் அல்ல.... 
உள்ளேயும் கூடத்தான்!.


முதல் முறை 
திருட நினைத்த புன்னகை..., 


பல முறை 
வருட நினைத்த கன்னங்கள்..., 


கை கூப்பி 
வணங்க நினைத்த கண்கள்..., 


உண்மையாய் 
காதலிப்பதாய் கூறிய உதடுகள்..., 


தயக்கத்துடன் 
பேசிய காதல் தினங்கள்..., 


மயக்கதுடனே போன 
காணாத கணங்கள்...,, 


இருவரும் 
மாறி மாறி கொடுக்க துணிந்த உயிர்கள்..., 


காதல்தான் எவ்வளவு அழகானது...., 
உன்  புன்னகையை போல..!!

உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்....

நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்....

புதன், 16 ஜூன், 2010

யாரோ சொன்னார்கள் , 
சந்தோஷமாக இருக்கும்போது 
நீ நேசிப்பவளை நினைப்பாய்...

சோகமாக இருக்கும்போது 
உன்னை நேசிப்பவளை நினைப்பாய்-என்று

ஆனால் 

எனக்கோ 
சந்தோசமாக இருந்தாலும் 
சோகமாக இருந்தாலும் 
என்றும் உன் நினைவு 
மட்டும் தான் 

நான் நேசிப்பவளும் 
நீ தான்!

என்னை நேசிப்பவளும் 
நீ  தான்!!,

பள்ளி இறுதி நாளில்
உன்னை நான் கேட்டேன்
விடையென்று நீ உதிர்த்துச்
சென்ற உன் உதட்டுப்
புன்னகை இன்னும்
விடை தெரியாமல்
என்னுள்
புதைந்து கிடைக்கிறது


என் கேள்விகள்
எத்தனைப்பக்கங்களானாலும்
உன் பதில் என்னவோ
மௌனம் கலந்த ஒரு
புன்னகை தான்...


அத்தனை கேள்விகளும் 
உன்
ஒரு அங்குல புன்னகை
முன் மண்டியிடும் மர்மமென்ன...?


எத்தனையோ முறை
நீ கேட்டு விடுவாயோ என்று
பக்க பக்கமாக
பதில் தயாரித்து வருவேன்
அத்தனை முறையும
நீ என் பெயரைக் கேட்டால் கூட
விடை தெரியாமல்
விழிப்பேன்


உன் பார்வை என்னும்
காந்த அலையில்
என் மூளை நரம்புகள்
முடக்கப்படுவது
இயற்கை தானே...?


கோனார் தமிழ்
உரை போல
காதலுக்கும் ஒரு
வழி காட்டியிருதிருந்தால்
அதுவாவது என் காதலுக்கு
ஒளி காட்டியாக
இருந்திருக்கும்


கவிதை
நீ கற்றுத்தந்த பாடம்...
உன் மௌனத்தை
மொழி பெயர்த்தேன்
எல்லோரும் என்னை
கவிஞனென்றார்கள்...


உண்மையில் நானொரு
மொழிபெயர்ப்பாளன்
என்பது எனக்கு உனக்கும்
மட்டுமே தெரிந்த உண்மை..
உனக்கும் 
எனக்கும் 
ஒரு வித்யாசம்...

நிஜங்கள் 
எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் 
உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...
சில 
உறவுகளுக்கு 
அர்த்தங்கள் இல்லை...

நீ இல்லையேல், 
வாழ்வில் அர்த்தம் இல்லை...


இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...


என் வெற்றியில் 
உன் பங்கிருக்கும்...


உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...


நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..


நம் நட்பை...
கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...


என்றும் 
உன் அருகில் இருப்பேனா 
என்பது எனக்கு தெரியாது..

ஆனால்...


ஓடி..கலைத்து வா...
நட்பென்னும் 
நிழலை கொண்டு 
நான் நின்றிருப்பேன்...


தோழியே!
உனக்காக
உன் தோழன் என்றும்
நான் இருப்பேன்!

சனி, 12 ஜூன், 2010

முன்னமே 
சிநேகம்தான்
என்றாலும் நேற்று


நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!
கடற்கரை
மணலில் 
உன் பெயர் எழுதினேன் 

கடல் அலை வந்து 
அள்ளி சென்றது
அழகான கவிதை என்று!

புதன், 9 ஜூன், 2010

நரம்புகளின் 
வழியே

ஒளியூட்டப் பட்ட
விழிகளின் வெளிச்சத்தில்
இமைகள் இமைக்க
மறந்த நிலையில்..,


உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க..,


உன் நாணமும்
என் ஆசையும் போட்டி போட..,


உன் வளைக்கரம்
வலு விழந்து
மூச்சுக் காற்று
முகவரி தேடிய பொழுதில்
சுகமாய் நடந்தேறியது

இன்றும் மறக்க முடியவில்லை


அன்று நம்மையும் அறியாது
சத்தமில்லாமல்

நம் இதழ்கள்
பிரசவித்த முதல் முத்தம்...........

பேசியே கொல்கின்றன
உன் விழிகள்

பேசாமல் கொல்கின்றன
உன் இதழ்கள்...
 

சனி, 5 ஜூன், 2010

வாழ்வில்
வெற்றியின் மகிழ்ச்சியில் சிறகடிக்கும் போதும் ....
தோல்வியில் மனமுடையும் போதும் ......

நேசிக்கும் போதும் .....
வெறுக்கும் போதும் ......

எனக்கு 

துணை இருந்த கவிதை !
எல்லாம் ரசிக்க தெரிந்தும் .........

நீ என்னருகில் 

இல்லாததால் எழுத முடியவில்லை ! 

நீண்ட தயக்கத்திருக்கு 
பிறகு 


உன்னை விரும்புகிறேன் 
என்றேன் 
மெலிதாய் புன்னகை செய்தாய் 
ஏன் என்றேன் 


அட போட 
நான் பிறந்ததே உன்னை 
காதலிப்பதற்கு மட்டும் தான் 
என்றாய் !

உன் இதயத்துக்கும் 
என் இதயத்துக்கும் 
ஒரு வித்தியாசம்தான்... 


அது உன்னிடம் இருந்துகொண்டு 
உனக்காக துடிக்கிறது...! 


இது என்னிடம் இருந்துகொண்டு 
உனக்காக துடிக்கிறது...!

அன்பாக அரவணைக்கும் 
உன் தோள்களிலே 
தலை சாய்த்து 
உன் மார்பு சூட்டில் 
குளிர் காய்ந்து 
உன் மடி மீது 
முகம் புதைத்து 

வாழப்போகும் 
அந்நாட்கள் தரும் 
இன்பத்தை…… 
சொர்க்கத்தை…… 

இன்னொரு ஜென்மம் எடுப்பினும் 
தரமுடியுமா 
இவர்களால் எனக்கு?