ஒரு
குளிர்கால மாலை
இருளும் வேளையில்
சில நீர்த்துளிகள்
புவியை நோக்கிச் சிதறின
வெளிச்சப் பறவைகள்
தங்கள் சிறகுகளை
முடக்கி ஓயும் வேளையில்
நிலவு
தன்
முகம் காட்டி நகைத்தது
பறவைகள்
சில விரைவாய்
தங்கள் கூடுகள் தேடின
மரங்கள்
மகிழ்ச்சியாய் தங்கள் கிளைகள் விரித்தன
மாலை
மங்கும் வேளையில்
முகம் எங்கும் துளிகளாய்
இரு மான்விழிகள்
குறும்பாய் விழித்தன என்னை
அழகின் சாயல்கள்
சிறிதும் குறையாமல்
அதரங்கள்
இரண்டு விரிந்து இசையை தெளித்தன
தோகைகளே இல்லாமல்
இரு கால்கள் அழகாய்
இங்கே நடை பயின்றன.
உன்னை
பார்த்தபோது நொடிகள்
ஏனோ நின்று போயின......
சிறகுகள் சில முளைத்தன......
உலகம் ஏனோ சுழன்றது கீழே........
பொழிந்தும் பொழியாமலும்
மழைச்சாரல்கள் வெளியே மட்டும் அல்ல....
உள்ளேயும் கூடத்தான்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக