வியாழன், 23 டிசம்பர், 2010

நீ மௌனிக்கிறாய்
நான் மரணிக்கிறேன்...

என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை

உன்னால் உயிர்த்த என் வாலிபம்
உன்னாலேயே
உதிர்ந்துவிடப் போவதிலும்
உனக்கு திருப்தி என்றால்

நீ
உதிர்த்து விட்டே போகலாம்

ஒரு பூந்தோட்டத்திற்காய்
தவமிருந்தேன் உன்னில் !

நீயோ
எறிந்து விட்டுப் போனது
கருகி விழுந்த சருகுகள்தான்

என் வினாக்களுக்கெல்லாம் பதில்கள் மௌனமா ?
சம்மத்த்தின் குறியீடு
மௌனங்கள் மட்டும் தானா ?
ஆயின்
உன் சம்மதங்கள் எனக்கு
தேவையில்லை இப்போது

வார்த்தைகளை நீ
எங்கேயடி தொலைத்தாய் ?
ஊமை பாஷையிலாவது
உன்னால்
உரையாட முடியாதா ?

என் அவஸ்தை சொல்லி
நான் அழுவதென்றால்
உன் விழிகளைக் கொஞ்சம்
கடனாகத் தா !

என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை.




புதன், 15 டிசம்பர், 2010


பூவே.. 

பறித்த பின்பும்
அழகாய்
புன்னகைக்கிறாய் நீ!


கொஞ்சம்
சொல்லிவிடேன் அந்த
ரகசியத்தை,


பக்கத்தில் சென்றாலே
பார்வையால்
முறைக்கும் என்னவளிடத்தில்..!




பிரிந்து 

செல்கிறேன் என்கிறாய்


உன் 

விருப்பத்திற்கு 

என்றாவது மறுப்பு சொல்லியிருக்கிறேனா?

போகும் முன், 


நீ 

சூடியிருந்த மலரை
என் கல்லறையில் விட்டுசெல்!




செவ்வாய், 7 டிசம்பர், 2010


நீ 
சத்தமில்லாமல்

என் 
கனவில் வந்து
முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கின்றது

என் 
கண்கள்!



என் 
இதயத்தில்
எனக்கு தெரியாமல்

இன்னும்

உன் 
மீதான
அன்பை பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறது

எனது காதல்!


சனி, 4 டிசம்பர், 2010


நீ
விடைபெறும் வேளைகளில்
அன்பான
வார்த்தைகளையே பேசு,
ஒருவேளை

நீ 
என்னை
வாழ்வில் மறுபடியும்
சந்திக்காமலேயே
இருக்கவும் கூடும்!


வெள்ளி, 3 டிசம்பர், 2010

இருபது நிமிடம் 
தாமதமாய் வந்த
என்னைத் திட்டுகிறாய் 

நீ..,


இருபத்தியொரு வருடம் 
தாமதமாய் வந்த



உன்னை 
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது 

என் காதல்..!



வியாழன், 2 டிசம்பர், 2010

கால் 
நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...

யாரும் 

இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...


ஆள் 

இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...

புற நகர் 

பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...

கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...

பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...

செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...

பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...

உன் 

நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...

நீ 

போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...

தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...

இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...

சொல்லாத காதலும் சொர்க்கம்தான்

நீ 
எனக்கில்லை என சுடும் 
அந்த நொடிகளை தவிர...!







நீ 
எனக்காக 
சொல்லும் கவிதைகளை விட

உன் 
மௌனம் 
சொல்லும் கவிதைகளே
எனக்கு பிடிக்கிறது 

ஏன் தெரியுமா...?

உன் 
மௌனத்தின் அா்த்தம் தான்
இன்னும் எனக்கு புரியவில்லை!




சனி, 27 நவம்பர், 2010

நான் 
ஏன் இப்படி ?

எதற்காக காதல் வலிகளைப் பற்றியே
கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் ?



அவள் வருவதற்கு முன்பிருந்தே
இவ்வுலகை ரசித்தேனே ?


பிறகேன் இப்படி ?
என் உலகம் இருட்டாக்கப்பட்டாலும்,
அவள் நினைவுகள் 

என்னை கவிதை எழுத தூண்டுகின்றனவா ?

உனக்கு மாற்றம் வேண்டும்....

அவள் கொடுத்து விட்டுப்போன வலிகளை
மறக்கத் துவங்கு....

தொலைத்துவிட்ட வழியைத் தேடு ....
ஆயிரமாயிரம் உறுதிகள் 

எனக்கு நானே
கூறிக் கொண்டே தனிமையில்
தோட்டங்களில் உலவிச்சென்றேன்,

அவள் நினைவுகள் தூரமாயின.
சில 

பூக்களும் 
என்னை வாழ்த்த விழைந்தன

தற்செயலாய் 
அவர்களை கடந்தபோது கவனித்தேன்,
என் வலிகளை உணர்த்த ,
கைகள் எங்கும் முட்களை ஏந்திக்கொண்டிருந்தனர்,

அவள் நினைவுகளை 
விட்டுப் பயணிக்க முயன்ற
என்னைப் பற்றி, ஏளனமாய்,
ஒன்றோடொன்று முகம் உரசி,
ரகசியம் பேசிக்கொண்டிருந்தன,

எனக்காக 
அவள் ,
என்றோ பரிசளித்த ரோஜாச் செடிகள்
.




விழி 
தேடும் வேளையில்,
மின்னலாய் வருகிறாய் ,
தேடியலைகிறேன்

என் காதலின் தடங்களை......
நீ 

விட்டுச் சென்ற 
மீதி உயிர்
கரைந்தோடுகின்றது,
நொடிகளை விட அசுர வேகமாய்!




புதன், 17 நவம்பர், 2010


காற்றின்றி இறந்து போகும்

ஒரு 
புல்லாங்குழலின் இசையாய்,

தினம் 
உன் ஸ்பரிசம் தேடியே
உயிருடன் இறந்து போகிறேன்.



எங்கேனும் 
சிதறும்
சிரிப்பின் சத்தங்களில் எல்லாம்


மீண்டும் 
உன் ஞாபகங்கள்
என் இதயத்தை நிரப்பி செல்வது
வாடிக்கையாகிப்போனது .





சனி, 30 அக்டோபர், 2010

பிரிவும் ஒரு காதல்தான்!


உனக்காக 
என் ஆசைகளை
பிரிந்தபோது..,


பிரிவும் ஒரு காதல்தான்!


உனக்காக
என் கண்கள் 
தூக்கத்தை பிரிந்தபோது..,


பிரிவும் ஒரு காதல்தான்!


உனக்காக 
என் உறவுகளை
நான் பிரிந்தபோது..,


பிரிவும் ஒரு காதல்தான்!


எனக்கான
என் வாழ்வை 
நான் மறந்தபோது..,


பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிதவளே!


காதலிக்கதொடங்கிவிட்டேன்
காதலாக உன் பிரிவை கூட..,









சனி, 16 அக்டோபர், 2010

பள்ளிச்சிறுவன் 
புத்தகத்தில் மயிலிறகு ஒளித்துவைத்திருப்பதை போல,


உன்னை
என் மனதிற்குள் ஒளித்துவைத்திருக்கிறேன்


ஒளித்துவைத்திருப்பவரின்
விருப்பங்களை ஒருபோதும் 
புரிந்து கொண்டதே இல்லை 


மயிலிறகும்,
நீயும்!

வியாழன், 14 அக்டோபர், 2010

பள்ளி இறுதி நாளில் 
உன்னை 
நான் கேட்டேன் விடையென்று 
நீ உதிர்த்துச் சென்ற 
உன் உதட்டுப் புன்னகை 


இன்னும்


விடை தெரியாமல் 
என்னுள் புதைந்து கிடக்கிறது.



சனி, 9 அக்டோபர், 2010


உணராத 

உன்னைவிட
உணர்வுகளை சுமக்கின்ற - இந்த
காகிதங்கள் அழகானது....




நீ
வரைந்த
கோலம்
அழகு என்றனர்
ஆனால்
நீ
கோலம் வரைவதே
அழகு
என்றேன் 



என்னை
எப்போதுமே தனிமைபடுத்துகிறாய்


காதலிக்கும் போது 
மற்றவரிடமிருந்து..,


பிரியும் போது
என்னிடமிருந்து..,




முன்பு மலராக விரிந்த 
உன்மனம்- இன்று
மொட்டாக மூடிக் கொண்டது.

முன்பு அன்பாக பேசிய 
உன் இதழ்கள்- இன்று
பேச மறுக்கிறது.

முன்பு பாசமாக பார்த்த 
உன்பார்வை- இன்று
பார்வையை வெறுக்கிறது.

முன்பு உறங்கும் போது கனவில் வந்த 
என் தேவதை- இன்று
உறங்க விடாமல் கொல்லுகிறாள்.

ஏன்
என்று என் காதலை கேட்கிறேன்
விடை சொல்லுமா?




நீ 
வரும் வழியில் காத்திருந்த 
என் கால்கள்
நீ கடந்து சென்றதை காண வில்லை...

உனைக் காண துடித்துக் கொண்டிருந்த 
என் கண்கள்
நீ பார்த்து சென்றதை பார்க்க வில்லை....

உன் குரலை கேட்க விரும்பிய 
என் செவிகள்
நீ காணம் பாடியும் கேட்க வில்லை....




ஞாயிறு, 3 அக்டோபர், 2010

என்

வீட்டு முற்றத்தை
அலங்கரிக்கும்
வெள்ளை ரோஜாக்களை கூட
பிடிக்கவில்லையடி

ஏனெனில்


அன்றுநீ கொடுத்த அந்த ஓரேயொரு

ரோஜாவால்!


உன்னை

காதலிக்கவில்லை -என்று
பலமுறை
சொல்லிஇருந்தேன்

ஆனால்
நான் பொய் சொல்ல
நினைக்கும்போதே

நீ சிரித்தாய்

என்
இதயத்துக்குள் இருந்து!.






காதல்..
கைசேர்ந்தவனுக்கு
வரப்பிரசாதம்.

தோற்றுப்போனவனுக்கு
சாபம்.

நானும் உணர்கிறேன்
நீயே சொல்
என் வாழ்கையை
மீட்டுக்கொடுத்த
நீயே
சாபத்தையும்
கொடுத்து விடுவாயா ?



சனி, 2 அக்டோபர், 2010

உன்னை  நினைத்து 
நான் கவிதை எழுதுனேன்!

ஆனால் 


என் கவிதை கூட 
என்னை நேசிக்காமல்,
உன்னை மட்டுமே நேசிக்கிறது!




சனி, 25 செப்டம்பர், 2010

கனவுகள் 

எனக்கு பிடிக்கும்-அதில் 

நீ 

வருவதால்,


கண்ணீர் 

எனக்கு பிடிக்கும்-அது 

உனக்காக வருவதால்,


தனிமை 

எனக்கு பிடிக்கும்-அப்போது 

உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்!




மரணம் 

என்றால் பயந்து விடுகிறேன்

நான் 

இறந்து விடுவேன் என்பதற்காக அல்ல,

உன்னைப் பிரிந்து விடுவேன் 

என்பதற்காகத்தான்.





மௌனம் கூட 

மொழியாகி போனது 


உன்னை கண்ட
பின்பு தான்!






நான் 

நானாக இருப்பதும் 

உன்னால் தான்!


நான் 

நானாக இல்லாமல் இருப்பதும் 

உன்னால் தான்!



சனி, 11 செப்டம்பர், 2010

நீ 
என்னை
பிரிந்துவிடுவாய்
என்று முன்பே எனக்கு
தெரிந்திருந்தால்,

உனக்கென்று
ஒளித்து வைத்த
என் காதல்
அனைத்தையும்
அன்றே உனக்கு
கொடுத்திருப்பேன்!

உன் 
பெயர்சொல்லி
மூடிவைத்த
என் மீதி  காதல்
அனைத்தையும்-நான்
இன்று என்ன செய்வது?

என் 
மனதில்
பெருகி வழியும்
உன்  நினைவுகளை
நான் என்ன செய்வது?

உன் 
நினைவுகளிலிருந்து
விலகி  ஓடுகிறேன்
ஓடினாலும்
இறுதியில்
உன்  நினைவின்
வாசலிலே வந்து
நிற்க வைத்து விடுகிறாய்!

என்
மனதின்
ஒவ்வொரு
அசைவிலும் உன்னையே
உணர்ந்து கொண்டிருக்கிறேன்
உன் மௌனத்தின் குரல்களே
இன்னமும் என்னில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
உனை பிரிந்து
காலங்கள் பல கடந்துவிட்டது
இன்றும் என்னிடம்
எதுவேமே இல்லை!
“நீ”– என்ற சொல்லைத் தவிர!!!






திங்கள், 30 ஆகஸ்ட், 2010

விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு 
கண்ணீராய் உன் நினைவுகள்..
 
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு 
சொந்தங்களை விட்டு விட்டு...
 
மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..
 
வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும் 
நொந்துப் போகும் மனது..
 
எந்திரமான வாழ்க்கைக்கு 
தந்திரமாய் நீ தரும் 
அழுகையோடு சேர்ந்த முத்தம்..
 
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம் 
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;